என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அர்ச்சனா மிஸ்ரா"
- பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
- கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டம் மே21-ந் தேதி , உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்றத் தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, "பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர்.
இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடு களும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்" என்றார்.
பா.ஜ.க.வின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர்.
இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளு மன்றத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சிக்கப்படுகிறது.
இதன்மூலம், பா.ஜ.க. மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.