search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்டைப்பயறு சாதம்"

    • உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.
    • புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    புழுங்கல் அரிசி - 1 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    தட்டைப்பயறு - 1/2 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    அரைக்க

    இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு

    பூண்டு பற்கள் - 6

    சின்ன வெங்காயம் - 4

    சோம்பு - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 சிறிய துண்டு

    கிராம்பு - 3

    கொத்தமல்லி இலை - சிறிது

    செய்முறை

    1. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து அரைக்கவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    2. தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

    3. புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    4. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    5. பின் தக்காளி விழுதை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அதோடு தனியா தூள் சேர்த்து வதக்கவும். பின் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.

    6. பின் ஊறவைத்து வடிகட்டிய அரிசியை மசாலாவோடு சேர்த்து நன்றாக கிளறவும். பின் 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

    7. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

    காய்ந்த தட்டப்பயறை வைத்து செய்தால் தண்ணீரில் இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    ×