என் மலர்
நீங்கள் தேடியது "டி.டி.வி. தினகரன்"
- வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.
- போதைப் பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், கோவையில் மருந்து குப்பிக்குள் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசிகள் என போதைப் பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.
- கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
சென்னை:
அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வருகிற 5-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா.
- தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.
தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது.
- காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.