என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் சடலம்"

    • இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்பு.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் நசுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேசை கைப்பற்றினார்.
    • பெண்ணின் உடலை பெட்டியில் வைத்து இழுத்து சென்று சாலையில் வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேசை கைப்பற்றினார்.

    தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன். கார்த்திக், உதவி கமிஷனர் பரத் ஆகியோரும் நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொன்று சூட்கேஸில் வைத்து வீசி சென்ற விவகாரத்தில் குற்றவாளி மணிகண்டன், பெண்ணின் உடலை பெட்டியில் வைத்து இழுத்து சென்று சாலையில் வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது.

    நேற்று அதிகாலை 2.50 மணியளவில் உடலை பெட்டியில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி இடம்பெற்றுள்ளது. 2 நிமிடங்களில் பெட்டியை வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    ×