search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசஐ"

    • ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் எனத் தெரிகிறது.
    • கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவருடைய பயிற்சி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அவருடைய பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் விருப்பம் இல்லை எனக் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புகிறது எனத் தகவல் வெளியானது. ரிக்கி பாண்டிங், பிளமிங் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் உலா வருகின்றன.

    இதற்கிடையே கவுதம் கம்பீரை பிசிசிஐ சார்பில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    இந்தியின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால், அதில் ஆர்வம் உள்ளது. வீரர்களுக்கு டெக்னிக்கல் திறனை சொல்லிக் கொடுப்பதைவிட அணி மேலாண்மை திறன் குறித்து பயிற்சி அளிப்பததான் முக்கியம்.

    விண்ணப்பம் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது. இந்திய அணியின் பயிற்சி, நபரின் (வீரர்) மேலாண்மை திறன் பற்றியது. அவர்களுக்கு எப்படி டிரைவ் ஆட வேண்டும், புல் ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பது அல்ல.

    இது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்களுக்கு உங்களால் சில வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும். கிரிக்கெட் எனக்கு ஏராளம் கொடுத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

    ஜூலை 1-ந்தேதியில் இருந்து 2027 டிசம்பர் 31-ந்தேி வரை அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஆகும்.

    ×