என் மலர்
நீங்கள் தேடியது "கெமிக்கல் தொழிற்சாலை"
- வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- இதையடுத்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் பீவார் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கரில் இருந்து நேற்று நச்சு வாயு கசிந்தது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலை உரிமையாளர் சுனில் சிங்கால் (47) நேற்று இரவும்,தயாராம் (52), நரேந்திர சோலங்கி ஆகியோர் இன்றும் இறந்தனர்.
பாடியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக நேற்று இரவு 53 பேர் நோய்வாய்ப்பட்டனர். வாயுவை சுவாசித்த பின் அருகிலுள்ள பலர் நோய்வாய்ப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சுவாசப் பிரச்சனை மற்றும் வாந்தி போன்ற புகார்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாயுக்கசிவைத் தொடர்ந்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவை அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
- இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாய்லர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெருமளவிலான கரும்புகை உருவாகி அதிலிருந்து சாம்பல்கள் மழைச்சாரல் போல கீழே விழுந்ததாகவும் 3 முறை வெடி சத்தம் கேட்டதாகவும் சுமார் 3-4 கிமீ வரை அதிர்வு உணரப்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலைக்குள் இன்னும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்கிற விபரம் இன்னும் தெரியவில்லை
இந்த தீ விபத்து தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த தீ விபத்து தொடர்பாக 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. . நான் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளேன். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.