search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகேந்திர யாதவ்"

    • பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.
    • பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 300 இடங்களை கைப்பற்றும் என்று பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் மற்றொரு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவும் அதேபோன்று கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் 240 முதல் 260 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுக்கு 35 முதல் 45 இடங்கள் வரை கிடைக்கலாம்.


    எனவே பாரதிய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் 275 முதல் 305 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆகையால் எந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஜூன் 14-ந்தேதி உங்களுக்கு விடை தெரிந்து விடும்.

    இவ்வாறு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

    ×