என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருடர்கள்"

    • லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
    • காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.

    மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

    அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.

    பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.

    அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.

    லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

    ×