என் மலர்
நீங்கள் தேடியது "கானா காதர்"
- ராயன் படத்தில் சந்தீப், அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
- ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பை கடந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பல பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரை இயக்கி, நடித்து வருகிறார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் "வாட்டர் பாக்கெட்" தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
கானா பாடலாக உருவாகி இருக்கும் "வாட்டர் பாக்கெட்" சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், வாட்டர் பாக்கெட் பாடலுக்கு வரிகள் எழுதிய கானா காதரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளனர்.
இது சம்பந்தமான வீடியோவை ராயன் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.