என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான் மசாலா தடை"

    • புகையிலை பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பால் போலீசார் வாகன சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா முழுவதும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையாக, புகையிலை மற்றும் குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006 மற்றும் அதன் விதிமுறைகளின்படி, இந்தத் தடை மே 24 முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இந்த முடிவு புகையிலை மற்றும் நிகோடின் நிறைந்த பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பால் போலீசார் வாகன சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போலீசாரின் வாகன சோதனையில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள புகையிலை மற்றும் குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தியாளர்களிடையே பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் தெலுங்கானா பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய சபாநாயகர், சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×