search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணபலம்"

    • வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
    • போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஒட்டிய 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் பைக்கில் வந்த ஒரு பெண் உட்பட 2 இளம் ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குடும்ப கார் டிரைவரை விபத்து பழியை ஏற்குமாறு கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்த சிறுவனின் தாத்தாவையும் டிரைவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் புனே போலீஸார் கைது செய்தனர்.

     

    இந்நிலையில் நேற்று (மே 27) சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை மாற்றியதாக 2 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பியூன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற தன் மூலம் ரூ.3 லட்சத்தை லஞ்சமாக சிறுவனின் குடும்பத்திடம் இருந்து மருத்துவர்கள் பெற்றதாக மருத்துவமனை பியூன் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவன் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியடியதற்கு சாட்சியாக ஏற்கனவே சிறுவன் மது அருந்திய சிசிடிவி காட்சிகள் பாரில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் மனிதன் பட பாணியில் நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் பட பாணியில் பியூன் மூலம் மருத்துவர்கள் லஞ்சம் வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ×