search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிகல்"

    • இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
    • அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

    மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது.  விண்ணில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பூமியில் இருந்து பார்ப்பது அலாதியான அனுபவத்தை தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.

    ஜூலை 5 - நிலவு இல்லாத நாள் [No Moon Day]

    இந்த நாளில் வானில் நிலவு தோன்றாமல் தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்களாக அதிகமாக பிரகாசித்து காண்போரை வசீகரிக்கும்.

    ஜூலை 6 - அப்ஹெலியன் [Aphelion]

    இந்த நாளில் பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதையே அப்ஹெலியன் நிகழ்வு என்கின்றனர்.

     

    ஜூலை 12 - மெர்குரி எலாங்கேஷன் [Mercury Elongation]

    மெர்குரி என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சிறிய கோள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மிகவும் உட்புறமாக உள்ள கிரகமாக உள்ளது. இதனால் பொதுவாகவ்வே பூமியிலிருந்து மெர்குரி கிரகம் நமக்கு புலனாவதில்லை. ஆனால் இந்த நாளில் மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.

     

    ஜூலை 21 - பக் நிலா [Buck Moon]

    இந்த நாளில் வானையே ஜொலிக்க செய்யும் அளவுக்கு முழு நிலவு தோன்றும். அதிக இடி இடிக்கும் மாதமாக ஜூலை இருப்பதால் இந்த நாளில் தோன்றும் நிலவுக்கு Thunder Moon என்றும் பெயர் உண்டு. மேலும் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் இதற்கு ஹே நிலவு என்றும் பெயர் உண்டு. அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

     

    ஜூலை 28& 29 - ஏரிகல் பொழிவு [ Delta Aquarids Meteor Shower]

    ஜுலை 28 அன்று இரவும், ஜுலை 29 அன்று காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழியும் நிகழ்வை விண்ணில் நம்மால் காண முடியும். இந்த எரிகல் பொழிவு ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் மத்தி வரையில் தொடர்ந்து நடக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28& 29] உச்சபட்சமாக பொழிவு இருக்கும்.

     

    • அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்தில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நெருப்பு மற்றும் சாம்பல் போல் மண் காணப்பட்டது.

    மேலும் பள்ளத்தில் இருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானில் இருந்து ஏதேனும் மர்ம பொருள் விழுந்ததா? என்று அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் தர்ப்பகராஜ், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு வந்து பள்ளத்தை பார்வையிட்டனர்.

    அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வேலூர் மாவட்ட அறிவியல் மைய அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த இடத்துக்கு சென்றனர். பள்ளத்தில் இருந்து எரிந்த சாம்பல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தனர்.

    வானில் இருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்.

    இங்கு விழுந்த எரிகல் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும். இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், எரிகல் விழுந்த இடம் அருகே செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

    இதனால் எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ×