search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் வறுவல்"

    • துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கி

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    வறுத்து அரைக்க:

    பட்டை - 2

    கிராம்பு - 3

    ஏலக்காய் - 3

    மராட்டி மொக்கு -1

    அன்னாசி பூ -1

    கல்பாசி - சிறிதளவு

    வரமிளகாய் - 4

    தனியா - 2 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    கருவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி- 10

    பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்

    கசகசா - 1 ஸ்பூன்

    துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை:

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம் 1 ஸ்பூன், பெருஞ்சீரகம் 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அதே கடாயில் 5 ஸ்பூன் துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து, கருவேப்பிலை போட்டு, வர மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    இதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து வறுத்து அரைத்த பொடியை சேர்க்க வேண்டும். சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும். இடையிடையே கலந்து விட்டு, 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான சிக்கன் வறுவல் தயார்.

    ×