search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் கான்"

    • டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • அவர் உடல் பருமன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரர். ஆனால் உடற்தகுதி என்று எடுத்துக் கொண்டால், குண்டாக காணப்படுவார். இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படி கீப்பிங் செய்வார் என்று ரசிகர்கள் ஏளனம் செய்வார்கள். அதற்கு ஏற்றபடி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின்போது விக்கெட் கீப்பராக சோபிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தன்னுடைய மகன் அசாம் கானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர் ரமீஸ் ராஜா. மற்றும் அணியில் இருந்து நீக்கியவர் என மொயின் கான் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மொயின் கான் கூறியதாவது:-

    2022 (2021) உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கு அசாம் கான் தேர்வு பெற்றார். ஆனால் ரமீஸ் ராஜா அவரை நீக்கினார். அந்த நேரத்தில் தலைமை தேர்வாளர் தவறு செய்திருந்தால், அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு தைரியம் இல்லை. இதன்முடிவு அவர்கள் ஒரு இளம் வீரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அதேபோல் இந்த உலகக் கோப்பையிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து இருப்பீர்கள்.

    நான் இந்த உலகக் கோப்பை போட்டிகள், அதற்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டிகள் அனைத்து போட்டிகளையும் பார்த்தேன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அசாம் நம்பர் ஒன் தேர்வாக இருப்பது போல் தோன்றியது. ஒரு போட்டிக்குப்பின் திடீரென ஒட்டுமொத்த வியூகமும் மாற்றப்பட்டது. ஒரேயொரு பந்தை சந்தித்து ஆட்டமிழந்த பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது மட்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் சொல்லமாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது. அவர் தனுக்குத்தானே உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். மற்ற வீரர்களை போன்று உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவர் தனது பிட்னஸில் முன்னேற்றம் கண்டு வருவதை நான் உணர்கிறேன். 

    • பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
    • இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.

    பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    • 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.

    இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×