search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியாவின் பொருளாதாரம்"

    • இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது.
    • காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.

    புதுடெல்லி:

    கடந்த 2023-24-ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8.2 சதவீதம் வளா்ச்சி அடைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக (என்.எஸ்.ஒ.) புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. வளா்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது. இதற்கு உற்பத்தித் துறை சிறப்பாகச் செயல்பட்டது முக்கிய காரணம். இந்த வளா்ச்சி இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.292 லட்சம் கோடி) எட்ட உதவியதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.417 லட்சம் கோடி) எட்ட வழியமைத்துள்ளது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.47.24 லட்சம் கோடியாக 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு 0.9 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 8.9 சதவீதமாக வளா்ச்சி அடைந்தது.

    இதேபோல 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.

    2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் வேளாண் துறையின் உற்பத்தி மதிப்பு 7.6 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண் டின் 4-வது காலாண்டில் 0.6 சதவீதமாக கடுமையாக சரிந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×