search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில் பாதிப்பு"

    • 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.
    • 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

    டெல்லியில் கடந்த 29-ந்தேதி நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கு மாறு மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

    வெப்ப அலை பாதிப்பால் நேற்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசா வில் 10 பேரும், ஜார்க்கண் டில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த மாநிலங்களில் 1,300-க்கும் மேற்பட்டோர் வெயில் பாதிப்பால் மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

    மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறை யாமல் வெப்ப அலை தொடர்ந்து வரும் நிலையில் நேற்று வரை குறைந்தது 54 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக பீகாரில் 32 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்து விட்டனர்.

    வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இன்று காலை நிலவரப் படி கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்களில் 45 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் வெயில் தாக்கம் மிக மிக அதிகளவு காணப்படுகிறது.

    குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த ஊழியர்கள் ஆவர்.

    தீவிர காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவர்கள் மிசாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    பீகாரில் வெப்ப பாதிப் பால் உயிரிழந்த 14 பேரில் 10 பேர் தேர்தல் பணியாளர்கள் ஆவர்.

    ×