என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைக்கா நிறுவனம்"

    • பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன
    • லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்வில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதில் பாரா, நீலோற்பம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே மதியம் 3 மணியளவில் 6 பாடல்களை உள்ளடக்கிய ஆல்பம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ரசிகர்கள் பாடல்களுக்கு வைப் செய்யத் தொடங்கிவிடுவர் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
    • 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

     

    'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.

    அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.

    சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழில் இங்கு வெளியிட மறுத்துள்ளது லைக்கா தயாரிப்பு நிறுவனம். ஷங்கர் இயக்கத்தில் இதற்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. வணீக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை. இத்திரைப்படத்தை தயாரித்தது லைக்கா நிறுவனம். இதனால் படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 3 திரைப்படத்தை எடுத்து தராமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்தியன் 3 திரைப்படத்தை படப்பிடிப்பு முடிக்க இன்னும் 65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
    • இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார்.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

    இப்படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார். ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற் எந்த ஒரு தக்வலும் வெளிவராததால் லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவின.

    ஆனால் இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில்  நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களின் ஸ்கெடியுலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×