search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராந்தி காரி மோர்ச்சா கட்சி"

    • 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
    • சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.

    காங்டாக்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் செல்வாக்குமிக்க மாநில கட்சியான சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

    முதல்-மந்திரியாக பிரேம்சிங் தமாங் ஆட்சி நடத்தி வந்தார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதால் பாராளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன்படி சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது.

    சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

    இவர்களில் யார்-யார் வெற்றி பெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய கடசிகளானபாரதீய ஜனதாவுக்கும், காங்கிர சுக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாததால் அந்த குட்டி மாநிலத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை.

    இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங் முதல் சுற்று முடிவில் 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதே சமயத்தில் முன்னாள் முதல்-மந்திரி பவன்குமார் முதல் சுற்றில் பின்தங்கி இருந்தார்.

    அதுபோல பிரபல முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியாவும் தனது பார்புங் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இதனால் சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.

    ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா மீண்டும் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சி 90 சதவீத வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்கிறார்.

    ×