என் மலர்
நீங்கள் தேடியது "ப்ளூம்பெர்க் அறிக்கை"
- இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்
- பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது..
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளது.
பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.
பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 17.9 பில்லியன் டாலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டாலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.
- கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
- வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இதற்கிடையே பணக்காரர்கள் பட்டியலில் இருவரில் யார் முந்துகிறார்கள் என்ற போட்டி ஆரம்பம் முதலே நிலவி வருகிறது.

அந்த வகையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிவில் இருந்த சமயத்தில் அதானியின் நிறுவனம் அதிக லாபத்தை சேர்த்துக் குவித்ததால் அவர் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
ஆனால் கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இந்திய அரசியலிலும் ஹிண்டன்பெர்க் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமத்தின் விமான சேவை வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் லாபம் ஈட்டியுள்ளது.

இதன்காரணமாக வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் ப்ளூம்பெர்க் கறிக்கையின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்துக்கு அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளள்ளார். தற்போதைய நிலவரப்படி முறையே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலராகவும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராகவும் உள்ளது.

- இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்
- ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும் அதை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்றும் என்று சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட புளூம்பெர்கின் அறிக்கைக்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

அதாவது தனக்கு 12 வது குழந்தை பிறந்தது உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அதை ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு சொல்வில்லையே தவிர இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.