என் மலர்
நீங்கள் தேடியது "மதர் டெய்ரி"
- விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
- தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 'மதர் டெய்ரி' நிறுவனத்தின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் குஜராத் மாநிலத்தின் அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.