search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்‌ஷன்"

    • டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை யில் கூட்டம் அலைமோதியது.
    • பார்களில் மது விற்பனை களை கட்டியது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப் பட்டிருந்தது.

    இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலையில் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை களை கட்டியது.

    டாஸ்மாக் பார்களில் மட்டுமின்றி சாலையோரங் களில் அமர்ந்தும் குடிமகன் கள் மதுகுடித்து கும்மாள மிட்டனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.200கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்று இரவு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கும் அரசியல் கட்சியினர் மதுபாட்டில் களை வாங்கி குவித்துள்ள னர். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெற்றிக் கொண்டாட்டத் துக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திட்ட மிட்டுள்ளனர். இதற்காக மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.80 கோடியில் இருந்து 100 கோடி வரை மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறும். நேற்று சாதாரண நாள் என்பதால் ரூ.100 கோடி வரையில் மது விற்பனை நடைபெற்றி ருக்கும் என்றும் ஆனால் இந்த விற்பனை 2 மடங்காக உயர்ந்து ரூ.200 கோடி வரை விற்பனையாகி இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் இன்றைய விற்பனை நேற்று முடிந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×