search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு வித்தியாசம்"

    • 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார்.
    • மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை இந்தியா கூட்டணி வழங்கி வருகிறது. என்.டி.ஏ கூட்டணி 296 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம், ஆர்.ஜே .டி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இறுதி முடிவு எப்படியும் மாற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போதைய 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார். வயநாடு தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    குறிப்பாக ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே இன்று பதிவான அதிக வாக்கு வித்தியாசம் இதுவாகும்.

    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே உள்ளார். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுவது வழக்கம். கடந்த 2019 தேர்தலில் 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அங்கு இந்த தேர்தலின் மூலம் முதல் முறையாகக் களம் காணும் அவரது மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

     

    ×