search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிவினைவாதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
    • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். 2019ஆம் ஆண்டு 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடி, இப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான். இங்கு பாமகவிற்கு 7 முதல் 8 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பாமக தான் காரணம்.

    நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது.

    ×