search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் கிரண்"

    • அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

    நடிகர் கார்த்தி கடைசியாக தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெய்யழகன் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

    அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் நடிகர்கள் கார்த்தி இந்த படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

     

    அவர் கூறியதாவது, "90 காலகட்டங்களில் வெளிவந்த அனைத்து மசாலா படங்களுக்கும் இந்த படம் சமர்ப்பணமாக இருக்கும். மேலும் படத்தில் சண்டை காட்சிகளும் பாடல்களும் இருக்கின்றன. கார்த்தி மற்றும் அவருக்கு தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் ஆகியோர் எம்ஜிஆர் ரசிகர்களாக நடித்துள்ளனர்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் எட்டு வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தாலும் என்னுடைய படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×