search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல் கலாம் வியூ பாயிண்ட்"

    • எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
    • தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை அந்த பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் - அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

    எனினும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார். இவரது இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

    இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    ×