search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹண்டர் பைடன்"

    • வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
    • ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

    ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

    54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

    அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம். 

    • குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
    • போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் பதவியில் உள்ள அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, மகனுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்று அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    இது தொடர்பாக அவர் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து ஹண்டர் பைடன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில், தற்போது ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், "நான் அதிபர், மற்றும் ஒரு தந்தை. தங்களது செல்ல பிள்ளைகள் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி அதில் இருந்து அவர்கள் விடுப்பட்டு, மீண்டு வருவதை பார்த்து பெருமை கொள்ளும் உணர்வை பல்வேறு குடும்பத்தினர் புரிந்து கொள்வர்."

    "இந்த வழக்கின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டு, நீதிமன்ற வழிமுறைகளுக்கு தொடர்ந்து மரியாதை அளிப்பேன். இந்த தீர்ப்பை எதிர்த்து ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்," என்றார்.

    • ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்தார்.
    • எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.

    இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.

    அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

     

     மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

     

     ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×