என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து நடந்துனர்"

    • பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பாராட்டினர்.

    இந்நிலையில், பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது. அரசு பேருந்தில் பயணித்த வாலிபரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


     19 வினாடிகள் ஓடும் வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார். பேருந்து என்னவோ காலியாக உள்ளது. ஆனால் பேருந்தில் ஏறிய வாலிபரோ உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக்கொள்கிறார். அப்போது வேகத்தில் செல்லும் பேருந்தில் இருந்து தவறி விழும் வாலிபரை ஒரு கைகொடுத்து காப்பாற்றுகிறார் நடத்துனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடத்துனர், வாலிபர் விழுவதை பார்க்காமல் ஒரு கையால் காப்பாற்றுகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×