search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாதம்"

    • ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
    • மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

    முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

     

    சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து  Non - consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.  

    மேலும் 967 கணக்குகள் நாட்டில் தீவிரவாதத்த்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று கங்கனா தெரிவித்தார்.
    • கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

     

    இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதர்க்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கங்கனா ரனாவத், தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு நடந்தது குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பது சரியல்ல என்றும் தெரிவித்திருந்தார். 

    ×