என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் கல்வித்துறை செயலாளர்"

    • 6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
    • விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம்.

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல் சுபோத் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு முடிவுகள் வெளிப்படை தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கி 2 மணி நேரத்திற்கு பிறகு தான் வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது.

    நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எங்கள் தரப்பில் இருந்து வினாத்தாள் கசிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

    முறைகேடு புகார்கள் தொடர்பாக கமிட்டி அமைத்து ஆராய்ந்தோம். எங்கள் குழு ஆய்வு செய்தவரை தேர்வு நடைமுறையில் எந்த தவறும் இல்லை. நீட் தேர்வு புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

    கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் இல்லை. தவறான வினாத்தாள் காரணமாக 1600 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

    விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.
    • பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது என எச்சரிக்கை.

    தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த கூட்டத்தில், "முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.

    கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

    பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது.

    பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

    தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பாதுகாப்பிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×