search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி ஏற்பு விழா"

    • முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சை.
    • ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா இன்று சென்னை கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    ஜே.பி. மோர்கன் சேஸ் & கோ- வின் நிர்வாக இயக்குனர் பிரபாகர் எட்வர்ட் இவ்விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். 

    மேலும், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு நவீன் ராகேஷ் அவர்களும், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கோகுல் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இடைக்கால வேந்தராக இருந்த கோமதி அம்மாள் அவர்கள் தன்னிடம் இருந்த செங்கோலை புதிய வேந்தரிடம் வழங்கினார்.

    தொடர்ந்து, ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறையாக கையொப்பமிடுதலைத் தொடர்ந்து, வேந்தராக தனது உரையை வழங்கினார். 

    இவ்வுரையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கான தனது தொலைநோக்கு பார்வையினை கோடிட்டுக் காட்டினார்.

    மேலும், அவர் உயிர் காக்கும் நலத்திட்டங்களான 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையையும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் புதிய வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

    பேராசிரியர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் இவ்விழாவிற்கான நன்றியுரையை வழங்கினார்.

    • மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

    இந்நிலையில் பதவியேற்பு விழாவில் போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்று கேள்வி எழுந்துள்ளது.

    • 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது.

    அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    240 தொகுதிகளை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகிறார். ஜவகர்லால் நேரு தொடர்ந்து 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆனார். இருப்பினும் அவர் ஜனநாயகவாதியாகவே இருந்தார். ஆனால் பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.

    மோடியின் நயவஞ்சகத்திற்கு அளவே கிடையாது. அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் அவரது ஆட்சி இருந்தது. மோடி அரசு முறைகேடான அரசாக இருந்தது. பணம், அதிகாரம், ஊடகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள்.

    இந்த புதிய அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் மக்களின் தீர்மானம் மோடிக்கு எதிராகவே உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    ×