search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசர்வ்"

    • காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    புர்கா அணிந்து வந்த ஒரே காரணத்தால் பெண் ஒருவர் உணவகத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் கிளைகள் கொண்டுள்ள கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு தனது கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நபீஸா என்ற இஸலாமிய பெண் ஒருவர் நேற்றிரவு உணவருந்த சென்றுள்ளார்.

    ஹோட்டலில் அதிக கூட்டம் இருந்ததால் ஒருவர் பின் ஒருவராக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தனது குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க சென்றுள்ளார்.

    ஆனால் உணவக மேனேஜர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டதாக தெரியவில்லை. காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து இரண்டொரு முறை மேனேஜரிடம் கேட்டும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பலர் உணவருந்திவிட்டு எழுந்து சென்ற நிலையில் இருக்கைகள் காலியாக இருந்ததாக நபீஸா கூறுகிறார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நபீஷாவின் கணவர் சென்று கேட்ட பிறகு அவர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆர்டர் செய்த உணவை கொண்டுவர மேலும் 1 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். இதுகுறித்து மேனேஜரிடம் கேட்டபொழுது தங்களை துளியும் பொருட்படுத்தாமல் அவர் அங்கிருந்து சென்றார் என்றும் அவர் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    இதுகுறித்து நபீஸா தனது பேஸ்புக் பதிவில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எனது வாழ்நாளில் தற்போது சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை. என்று தெரிவித்துள்ளார். 

    ×