search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் அமைச்சரவைக் கூட்டம்"

    • குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • பிரதமர், மக்களின் முன்னேற்றத்துக்கு அயராது உழைக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

    நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர்.

    இவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தொடர்ந்து, புதிதாக பதவியேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், மக்களின் முன்னேற்றத்துக்கு அயராது உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் கூடியது.

    நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது வரை இலாக்கா ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த கூட்டத்தில் இலாக்கா அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×