என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வக்கீல் கவுதம்"
- நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
- உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர்:
சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் வசித்து வந்தவர் கவுதம். 29 வயதான இவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வக்கீல் கவுதம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரை சுற்றி வளைத்தனர். தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவர்கள் கவுதமை வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 3 பேரும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் கவுதம் கீழே சாய்ந்தார். உயிருக்கு போரா டிய அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தப்பி ஓடி தலை மறைவானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்த தும் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் கொலையாளிகளை உடன டியாக பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து வக்கீல் கவுதம் கொலை தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட வக்கீல் கவுதம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை ஜாமீனில் எடுத்துள்ளார். இது தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேருக்கும், வக்கீல் கவுதமுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் கவுதமை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
இதையடுத்து அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு திருவான்மியூர் சிக்னல் பகுதிக்கு சென்ற கவுதமை பின்தொடர்ந்து சென்று 3 பேரும் சரமாரி யாக டெ்டிக் கொன்றுள்ள னர். இரவு 8.30 மணி அளவில் சரமாரியாக வெட்டுபட்டதும் கவுதமை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.
அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த கவுதமின் உடலை ஒப்படைப்பதற்கு முன்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளது. இதனால் கவுதமின் நண்பர்களான சக வக்கீல்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்கள். உறவினர்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.
இதையடுத்து போலீசார் சென்று சமரச பேச்சு நடத்தியதையடுத்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை ஒப்படைத்தது. இதன் பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கவுதமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்