search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷான் ஆண்டனி"

    • தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்தது
    • மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து பெறும் வெற்றியை பெற்றது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

    சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    அதன்படி, இத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதியின்றி உபயோகித்ததாக வழக்கு தொடர்ந்தார், தற்பொழுது இந்த பிரச்சனையும் ஓங்கி எழுந்துள்ளது. இந்த வழக்கிற்கு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனியிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது   என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×