search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sir Vivian Richards Stadium20 ஓவர் உலகக் கோப்பை"

    • ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
    • மழையால் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக மழையால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

    இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர்8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற வாழ்வா-சாவா சிக்கலுக்கு மத்தியில் ஓமனுடன் இன்று களம் காணுகிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    இங்கிலாந்தை பொறுத்தவரை ஓமன் மற்றும் நமிபியாவை வீழ்த்த வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக்கில் ஸ்காட்லாந்தை சாய்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து (+2.164) வலுவாக இருப்பதால் இங்கிலாந்து (ரன்ரேட் -1.800) இரு ஆட்டத்திலும் மெகா வெற்றியை பெற்றாக வேண்டும்.

    முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமாகும்.

    ×