search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம்"

    • இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
    • ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக அமெரிக்காவின் எய்சென்ஹோவர் பார்க்-இல் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கட்டமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக இல்லை என கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மைதானத்தின் பிட்ச்கள் வெளியே தயாரிக்கப்பட்டு, அவை மைதானத்திற்குள் பொருத்தப்பட்டன. கிட்டத்தட்ட தற்காலிகமாகவே இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.


     

    இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்று முடிந்த இந்தியா - அமெரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுமையாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை சுற்றிலும் புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மைதானம் மற்றும் பிட்ச்-ஐ உள்ளூர் பயன்பாட்டிற்காக விட்டுவைத்துவிட்டு, மைதானம் முழுமையாக இடிக்கப்பட இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 நாட்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது. 

    ×