என் மலர்
நீங்கள் தேடியது "பிஎம்டபிள்யூ R 1300 GS"
- புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
- முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.