என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "ஏலியன்ஸ்"
- வீடியோ விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது போல உள்ளது.
- மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் வித்தியாசமான சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேற்று கிரக வாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மேகங்கள் மீது மனிதர்களின் தோற்றம் போன்ற வேற்று கிரக வாசிகள் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது போல உள்ளது. அதில், மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. அந்த உருவம் வேற்றுகிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பயனர்கள் பலரும் ஏலியன்கள் தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை தூண்டி உள்ளது.
A passenger on a commercial airline captures what appears to be multiple beings standing on cloud cover, what is going on?#theparanormalchic #alien #airline #paranormal #ufo #fyp pic.twitter.com/CARF6XFGxD
— Myra Moore- The Paranormal Chic (@t_paranorm_chic) December 30, 2024
- ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா எனும் வாதம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
- ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்:
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்ததாகவும், சிலர் அதனைப் பார்த்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஏலியன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏலியன்கள் பூமியில் மனிதர்களிடையே ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த ஆய்வறிக்கையில் பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என்றும், நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும் என்றும், பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும் என்றும், ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம் எனறு கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கின்றனர்.