search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபம்"

    • நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
    • மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.

    நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

    அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    ×