என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவி மும்பை"

    • சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

     

     

    ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
    • விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 1,160 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ரூ,16,700 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய திட்டம் வருகிறது. இதில் இரண்டு ஓடுபாதைகள் ஒன்றுடன் ஒன்று 1.55 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுகிறது.

    இந்த நிலையில், விமான நிலையத்தில் நிலையத்தில் ஏர்பஸ் சி 295 விமானத்தை டச் டவுன் செய்து விமானம் சோதனை முறையில் தரையிறக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் போக்குவரத்து கேரியர் C295 விமான நிலையத்தின் தெற்கு ஓடுபாதை 26 இல் விமானம் தரையிறங்கியது என்று விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்தார்.

    விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

    அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×