search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்"

    • லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    • கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.

    "திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஒய்.வி. சுப்பா ரெட்டி பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மிகவும் மோசமான வகையில் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.

    அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?.

    இவ்வாறு சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    ×