என் மலர்
நீங்கள் தேடியது "கிறிஸ் கெயில்"
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
- கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
- கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
- 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.
முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.
இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.
சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.
விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.
எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
- 2024 ஆம் ஆண்டில் இதுவரை நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பூரன் 139 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ் கெயில் மட்டுமே 6 இடங்களை பிடித்துள்ளார்.
வீரர் | சிக்ஸர்கள் | ஆண்டு |
நிக்கோலஸ் பூரன் | 139* | 2024 |
கிறிஸ் கெயில் | 135 | 2015 |
கிறிஸ் கெயில் | 121 | 2012 |
கிறிஸ் கெயில் | 116 | 2011 |
கிறிஸ் கெயில் | 112 | 2016 |
கிறிஸ் கெயில் | 101 | 2017 |
ஆண்ட்ரே ரஸ்ஸல் | 101 | 2019 |
கிறிஸ் கெயில் | 100 | 2013 |
க்ளென் பிலிப்ஸ் | 97 | 2021 |
கீரன் பொல்லார்ட் | 96 | 2019 |
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் ரோகித் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி, ரோகித் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 337* சிக்ஸர்களை விளாசியுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.