search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி பேட்டர் தரவரிசை"

    • டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
    • தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி உள்ளார்.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் சதம் அடித்தனன் மூலம் ஐசிசி-யின் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

    மேலும் தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை சேர்ந்த அதப்பட்டுவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தை சேர்ந்த ரூத் ஸ்கிவர்-ப்ரண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ×