search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜஸ்பிரிட் பும்ரா"

    • இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
    • நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.

    அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.
    • இவரது பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம்.

    டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி அதி வேகமாக வீசுகிறார். இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.

    இதைப் போன்று வெள்ளை நிற கிரிக்கெட் பந்தையும் அவர் அபாரமாக வீசி நெருக்கடி கொடுக்கின்றார். பும்ராவை நீங்கள் பந்துவீச்சு தொடக்கத்திலும் பயன்படுத்தலாம். இதே போன்று டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம். ஒரு ஓவருக்கு 12- 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் அபாரமாக யாக்கர்கள் வீசுவார். இந்த பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே பும்ரா எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் தான்.


    பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேறி வருவதை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் வீசும் போது கிரிக்கெட் வர்ணனையும் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் செய்கின்றேன்.

    இதைப் போன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    இவ்வாறு பிரெட் லீ கூறினார்.

    • பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    • நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன. ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டியது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன். ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டுகிறது. நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது. இங்கே என்னுடைய குடும்பமும் இருக்கிறது.

    கடந்த முறை நெருங்கியும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எங்களுடைய வேலை முடிந்துள்ளது. இது போன்ற போட்டியில் உங்களுடைய அணியை வெற்றி கோட்டை தாண்ட வைப்பதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இது போன்ற பெரிய நாட்கள் வரும் போது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடர் முழுவதுமே நான் தெளிவாக உணர்ந்தேன்.

    எப்போதும் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஆனாலும் அங்கே உங்களை உணர்ச்சிகள் மேலே தூக்கும். இருப்பினும் நீங்கள் போட்டியை முடிந்த பின் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். 16-வது ஓவரில் பந்தில் கொஞ்சம் கசடு இருந்தது போல் தெரிந்தது. அதை என்னால் ரிவர்ஸ் செய்ய முடியும். அதை செய்யும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

    இவ்வாறு பும்ரா கூறினார். 

    • நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.
    • முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    பிரிஜ்டவுன்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் இந்திய அணி சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் எனது இலக்கு பும்ரா மட்டும் அல்ல, இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவருமே என ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர் குர்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாக, எனது இலக்கு ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அல்ல. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் அடிக்க பார்க்கிறேன். பொதுவாக ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். இது பும்ராவுக்கு எதிரான ஒரு போர். ஒருவேளை மற்றொரு பந்துவீச்சாளர் என்னை வெளியேற்றலாம். ஆனால், எனக்கு அவரை (பும்ரா) அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிப்பேன். அது பும்ராவாகவோ, அர்ஷ்தீப்பாகவோ அல்லது சிராஜாகவோ இருக்கலாம். எனது ஏரியாவில் பந்து வீசினால் நான் அவர்களை அடிப்பேன் அல்லது நான் ஆட்டமிழந்து வெளியேறுவேன்.

    நாங்கள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, உலகக் கோப்பையில் எப்படியாவது பங்கேற்பதாக எங்கள் மனநிலை இருந்தது. ஆனால் இப்போது எங்கள் மனநிலை சாம்பியன் ஆக வேண்டும் என்பது மட்டுமே. கோப்பையை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.

    நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம். முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு குர்பாஸ் கூறினார்.

    ×