search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ப்ரோஸ்"

    • இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
    • அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.

    இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

    கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

    தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.

    அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×