என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் பார்த்திபன்"
- தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
- நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.
- பெண்களுக்கு முன்பை விட திரைதுறையில் அதிக பாதுகாப்பு உள்ளது.
- எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்.
புதுச்சேரியில் கொரோனா காலத்தில் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது. படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, பாக்யராஜ் உள்ளிட்ட திரை துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணம் ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாகவும், தொலைகாட்சி சீரியலுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டது.
இதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்றத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால் தான் இயக்கித் தர தயார் எனவும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் பார்த்திபன் கூறினார்.
பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசும் கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும். நல்ல திரைப்படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடைய வைப்பது சரியல்ல. நடிகர் தனுஷ், நயன்தாரா மோதலை பார்வையாளனாகவே பார்த்து ரசிக்கிறேன்.
பெண்களுக்கு முன்பை விட திரைதுறையில் அதிக பாதுகாப்பு உள்ளது. தமிழ், மலையாள நடிகைகளுக்கும் பாதுகாப்பு உள்ளது.
தமிழ் திரைப்பட கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரியது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையை தவிர ஏதும் தெரியாது. நல்ல மனிதர் என அவர் மனைவி தந்த சான்றிதழை வேறு யாரும் தரமுடியாது.
குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும். அதை பெரிது படுத்தியிருக்கக்கூடாது.
தமிழகத்தில் அரசியலில் சுவாராஸ்யமான பேச்சின் மூலமே பதவிக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய், சீமான் ஆகியோர் பேச்சு வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவை.
தி.மு.க. பற்றி விஜய் பேசுவது தவறில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. விஜய்க்கு தி.மு.க. மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்காது என நினைக்கிறேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக த.வெ.க. உள்ளது. அரசியலில் ஆர்வமுண்டு, யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன்.
எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசையிருப்பதால், வரும் தேர்தலுக்கு விஜய் கட்சி தொடங்கியதால் எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுச்சேரியை மையமாக வைத்து படம் தயாரிக்கும் பார்த்திபன்.
- ‘54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு.
சினிமா நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள்.
புதுச்சேரியை மையமாக வைத்து நான் ஒரு படம் தயாரிக்கிறேன். அதற்கு அரசின் உதவியை கேட்பதற்காக அமைச்சரை சந்தித்தேன். அவரும் முடிந்த அளவு உதவுவதாக தெரிவித்தார்.
வழக்கமாக திரைப்படங்களின் ஒரு சில காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்படும். ஆனால் இந்த படத்தில் 99 சதவீத காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளது.
'54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு. படத்தில் நான் தான் கதாநாயகன். இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. படங்களுக்கு புதிய பெயர் வைக்காமல் பழைய பெயர் வைக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. குறிப்பாக 'பராசக்தி' படம் என்றால் அது கலைஞர்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம், பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பார்த்திபன் கூறியதாவது:-
புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது.
விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும். அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது. ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
அதனால் தடைகளை தாண்டி செல்வதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. அதுபோல் விஜய்யும் தடையை தாண்டி செல்ல வேண்டும். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால்தான் அடுத்த இடத்துக்குவர முடியும்.
எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள். அதை விடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது. இதனால் நான் விஜய்க்கு ஆதரவாக செல்கிறேன் என்று அர்த்தமல்ல.
பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்கமுடியாத விஷயம். அதில் எதிர் கருத்து சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.