என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி விவகாரம்"
- கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழக்கி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.
- அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்ற மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்கிற மூதாட்டி, மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, வடிவு, நாராயணசாமி, ராமு உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த 80 பேரில், மேலும் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
- 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் அலுவல் பணிகள் முடிந்த பிறகு, தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
- கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.
- மறைந்தோர்க்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
- இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.
மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
- சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என கூறியுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
- 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இப்படி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகமாக கலக்கப்பட்டதால், அதனை குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு அவர் செல்ல உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
மேலும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
- இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய பலி அரசு நிர்வாகத்தில் அலட்சியம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024
- கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது.
உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.