search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம்"

    • உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
    • மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.

    இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.

    இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

     

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

     

    மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×