search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமருத்துவம். ஆரோக்கியம்"

    • காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம்.
    • நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும்.

    வயிறு காலியாக இருக்கும்போது, உடல் ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும். பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவற்றை காலையில் உட்கொண்டால் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.

    அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குவதோடு நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும். அதனால் காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம். அதற்கு ஏற்ற பழங்கள் இவை...

     வாழைப்பழங்கள்

    இவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலுக்கு விரைவாக ஆற்றலை கொடுக்கும்.

    தர்பூசணி

    அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது என்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். அதிலும் காலை வேளையில் உண்ணும்போது உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்யும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

    பப்பாளி

    இதிலிருக்கும் என்சைம்கள் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலுக்கும் நிவாரணம் தரும்.

    ஆரஞ்சு

    வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.

    ஆப்பிள்

    ஆப்பிளில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. செரிமானத்திற்கும் உதவி புரியும்.

    அன்னாசிப்பழம்

    இதில் புரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.

    மாம்பழம்

    வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழங்கள் அன்றைய நாளில் உடலுக்கு தேவையான சத்தை வழங்கி, உற்சாகமுடன் செயல்பட வைக்கும். இதில் சர்க்கரை அதிகம் என்பதால் குறைவாக சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் குறைந்த கலோரிகள் நிரம்பியுள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கக்கூடியவை. செரிமானம் சுமுகமாக நடைபெறுவதற்கு உதவி புரியும்.

    கிவி

    வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. செரிமானத்திற்கு உதவி புரியும்.

    திராட்சை

    இதில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக அளிக்கும்.

    ×