என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் அம்பானி"

    • இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்

    இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.

     

    அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

    ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

    அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம்  குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் புகாரில் ஊழல் அல்லது லஞ்சம் குற்றச்சாட்டு சேர்க்கப்படவில்லை.
    • அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை மீறவில்லை.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான அதானியின் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது.

    அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு பேர் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததை தெரிவிக்காமல் மறைத்ததன் மூலம் இத்திட்டத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து அதானியை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.

    அந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதானி, அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை என் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் தெரிவித்துள்ளது. இதானல் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன.

    அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் அளித்த சிவில் புகாரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படவில்லை என அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் தெரிவித்துள்ளது. இவர்கள் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை மீறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    ×